Notes of sivankanda athikaram patthiram {குறிப்பு: (சிவகாண்ட அதிகாரப் பத்திரம் )}
💙"பஞ்சவர்ணக்கிளி ஒன்று இருந்து பறந்து போகக் கண்டேனடா" ---சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:
பிதுர்கள், தெய்வம் , விருந்தினர்,சுற்றத்தார்,தான் ஆகிய ஐந்து சிறப்புகளைச் செய்ய வேண்டிய இல்லற வாழ்வு மக்களிடமிருந்து பறந்து போகக் கண்டேன். (I found myself flying away from the home life people who had to do the five specialties of the gods, the goddess, the guest, the circus, the self. )
குறிப்பு:
"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை."
---- திருக்குறள்
பொருள்:
தென்புலத்தார், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் எனும் ஐவர்களிடத்தும் செய்ய வேண்டிய அறச் செயல்களை தவறாமல் செய்தல் கடமை ஆகும். (It is obligatory to perform the charitable deeds that are to be done to the South, to God, to the guest, to the neighbor, to himself. )
-----------------------------------------------------------------------------------------------------------------------------
💙"ஆணாகிப் பெண்ணாகி உங்கள் அம்பலக்கூத்து ஆண்டியப்பா" ---சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
குறிப்பு::
அம்பலம் என்னும் சொல் சகசுராரத்துக்கும் , ஆக்ஞா பகுதிக்கும் சித்தர்களால் பயன்படுத்தப் படுகின்றன.
இங்குச் சகசுரார பகுதிக்குப் பயன்படுத்தப் படுகின்றது.
அகிலத்திரட்டில் முன் விதிபடியான நிகழச்சிகளை வைகுண்டர் அம்பல மேடையில் நடத்துவதாக வரும்; இது உலகியல் கூற்று. (The word Ambalam is used by the Siddhars for sakasura and agna.Here it is used for the Sakasura area.Vaikundar Ambala will be hosting pre-regular performances on the international stage; This is a secular claim.)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
🌸"அடிப்பார் அடிக்க வந்தல் அடியைச் சகித்திடுங்கோ"---சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:
உங்கள் மேல் எந்தக் குற்றமும் இல்லாமல் யாராவது தேவையற்ற தண்டைனை தந்தால் அத்தண்டனைையைப் பொறுமையோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.(If someone inflicts unnecessary punishment on you without any guilt, accept that punishment patiently.)
குறிப்பு::
சகிப்புத் தன்மை (பொறுமை) பற்றி அகிலத்திரட்டு : : : : : :
**"பொறுமை பெரிது புவி ஆள்வாய் என்மகனே"**
பொறுமை மிகவும் பெரியது என்பதை அறிந்து இப்புவியை ஆட்சி புரிவாயாக.(Know that patience is too great to rule the world)
**"பொறுமை பெரியோராய்ப் பூதலம் எல்லாம் வாழ்வார் "**
பொறுமையோடு பெரியோராய் எல்லா இடங்களும் பரந்து வாழவர்.(we should live like Adults with patience , in everywhere)
**"பொறுமை பெரிது பெரியோனே என்மகனே தருமம் பெரிது தாங்கி இரு என்மகனே "**
என் மகனே பெரியவனே,பொறுமையும் தருமமும் எல்லாவற்றை விடவும் பெரியன. (My son is great, patience and charity are greater than all.)
* * "பொல்லா தாரோடு பொறுமை உரை என்மகனே"**
பொல்லாதவரோடு உன்னால் முடிந்தவரை பொறுமையாகப் பதில் உரைத்திடு. (Answer the wicked as patiently as you can)
* * "சீரான பொறுமை செய்வது நீர் கண்டிருங்கோ"**
குள்ளமான முனிவர்கள, அவர் செய்கின்ற செயல்கள் முழுவதும் நீங்கள் மிகப் பொறுமைேயுடன் பார்த்திருங்கள்.
* *"போற நீசன் தனக்குப் பொறுமையாய் நின்று கொள்ளு" **
அழிந்து போகப் போகின்ற நீசனுக்கு எதிராக நீ பொறுமையைக் கடைப்பிடித்து நிற்பாயாக.
**"பொன் மக்கள் எல்லாம் பொறுமையுள்ள சாணாராய்ப் பிறந்தார். "**
என் மக்களாகிய இந்த ஏழு லோகங்களில் உள்ள பொன் மக்கள் எல்லாரும், பொறுமை பொருந்திய சாணாராகப் பூவுலகில் பிறந்தனர்.
**"பொறுமைப் பதியில் பொன்வாசல் ஒன்றதிலே" **
மௌனத்தன்மையுள்ள அப்பதியில், பொன் வாசல் ஒன்று உண்டு.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
🍁"காப்புகட்டி வைத்த மகன் கனபவுசு பண்ணுகிறான்" ----சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:
நான் காப்புக்கட்டி வைத்த மகன் ஒருவன் அதிகமான திமிரைக் காட்டுகிறான்.(One of the sons I insured shows more arrogance.)
குறிப்பு::
காப்புகட்டி வைத்த மகன் :: என்னும் சொற்கள் சீசரைக் குறிப்பிடுவதையும். (refer to Caesar.)
சீசரைத் தமது குழந்தையாகக் கருதுவையும் பல இடங்களில் காணலாம். (The idea of Caesar as their child can also be found in many places)
அகிலத்திரட்டு நூலில்:
"இப்படிேயே ஈசர்முதல் எல்லோரும் நாமம் இட்டு
அப்படியே பிள்ளைக்கு அவரவர காப்பு அணிந்து"
என்று கூறும் வரிகளில் "பிள்ளைக்கு (வைகுண்டர்) அவரவரே காப்பு அணிந்து" என்னும் சொற்கள் அக்காலத்திலும் காப்பு அணியும் வழக்கம் இருந்துள்ளது என்பத்தை பற்றி கூறுகிறது. (The words "the child (Vaikundar) wears his own bracelet" are still in use at that olden time.)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
🍃"அஞ்சாடு மேய்த்து அடைத்த ஆனந்தகோன் வந்தேனடா "
----சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:
ஐம்புலன்களையும் சீரான முறையில் உலக நுகர்ச்சிகளைப் பெறச் செய்து, அடக்கி, அடைத்து வைத்திருக்கின்ற ஆனந்த கோன் ஆகிய வைகுண்டர் இதோ. ( Here is Vaikundar, the Ananda Kone, who has subdued and subjugated the senses in a balanced way. )
குறிப்பு::
அஞ்சாடு= (ஐந்து + ஆடு)ஐம்புலன்கள்
சுவை -- வாய்; ஒளி-கண்; ஊறு -- மெய்; ஒசை-காது; நாற்றம்--மூக்கு, அடைப்புக் குறிக்குள் ஐம்பொறிகள் கொடுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு பொருளையும் முதலில் அனுபவிப்பது புலன்களே. ( Taste - mouth; Light-eye; Touch - Body; Sound- ear; Odor - The nostrils are enclosed in brackets. The senses are the first to experience every object.)
இங்கு அஞ்சாடு என்பதைத் திருமூலர் பசு ஐந்து என்கிறார்.
"பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு"
பொருள் ::பார்ப்பானாகிய ஆருயிர்களின் அகமாகிய உடம்பின்கண் பால்தருந் துணையாம் பசுக்கள் ஐந்துள்ளன. அவை அறிபுலனாம் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ப. அப் பசுக்களை மேய்த்தருள்பவன் சிவன்.( There are five cows that support the internal body of the barbarian Soul. They are cognition consonant, mouth, eye, nose, ear. Shiva is the shepherd of the cows.)
**பாற்பசு ஐந்து - ஐம்பொறிகள். பால் - ஆனந்தம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
☄️"ஊரோட்டம் தேரோட்டம் மக்கா ஒன்று வட்டம் ஆகுதடா"
----சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:
இறைவன் ஒன்று என்னும் நிலை உருவாகி எல்லா ஊர் மக்களும் ஒரே தேரில் இறைவனை அமர்த்தி அந்நிகழ்ச்சியைக் கண்டு களிக்கும் நாள் விரைவில் உருவாகும். ( The day will soon come when all the people of the village will place the Lord in one chariot and enjoy the event.)
குறிப்பு::
இங்கு இறைவன் ஒன்று என்று கூறும் கருத்தை
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" - திருமந்திரம்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"--புறநானூறு
என வரும் கருத்துகளோடு மேற்கண்ட வரியை ஒத்து நோக்குக. ( Here is the idea that the Lord is one
"One Tribe and One God" - Thirumanthiram
"Everybody listen to anything" - Purananuru
Compare the above line with the comments that come as.)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
💐"கொம்பன்புழு என்று அறியாமல் குதி போடுகிறார் கலியில் "
----சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:
இப்படி செய்வதால் தவறான உறவால் கொம்பன் புழுக்களை உருவாக்குகின்றார்கள் என்பதும்,அப்புழுக்கள் தங்களை உருவாக்குகின்ற அவர்களையே அழிக்கும் என்பதும் தெரியாமல் அவர்கள் மகிழச்சி ஆரவாரம் செய்கிறார்கள். (They cheer without realizing that by doing so they are creating horn worms out of the wrong relationship and that the worms will destroy the very ones they are creating.)
குறிப்பு::
கொம்பன்புழு-- எய்ட்ஸ் நோயை உருவாக்கும் கிருமி (The germ that causes AIDS)
சட்டத்திற்குப் புறம்பானதும், இயற்கைக்கு மாறானதும் ஆகிய உறவினால் இந்தக் கிருமி உருவாகிறது. (The virus is caused by a combination of illegal and unnatural.)
இந்தக் கிருமியை அழிக்க இன்னும் மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை.(No drug has yet been found to kill this germ.)
தவறான சேர்க்கை மூலம் இக்கிருமி உருவாவதைச் சுவாமி அன்றைக்கே சுட்டிக் காட்டியுள்ளார்.(Swami pointed out on the same day that the germ was formed by the wrong combination.)
இதை அகிலத்திரட்டு
"எதுவும் வரம்பு தப்பி இருக்குதுகாண் வையகத்தில் "
எல்லாமே பூவுலகில் கலியனால் வரம்பு மீறிக் கொண்டே இருக்கிறது.( Everything on earth is out of bounds.)
"தானம் அழிந்தாச்சே தம்பியர்கள் சான்றோரின்
மானம் அழிந்தாச்சே வரம்பு எல்லாம கெட்டாச்சே
பூப்பியமும் குலைத்துப் புரசியோடு ஒப்பமிட்டான்
காப்பிலியன் ஏதுவினால் கட்டழிந்தார் சான்றோர்கள்"
- - இத்தேசம் முழுவதும் நீசக்கலியனால் நல்ல நிலைகள் எல்லாம் அழிந்துவிட்டான்.; இனி வரவிருக்கின்ற இளைய தலைமுறையினரின் மானநிலையும், கட்டுப்பாடும் கெட்டுவிட்டன; சான்றோரின் கற்பு நிலைகளைக் குலைத்து, சக்தியற்ற முருங்கை மரத்தைப் போன்ற நிலைக்குச் சமமாக்கி விட்டான். காக்கும் எண்ணமில்லாத கலியன் ஏதுவினால் சான்றோர்கள் ஒற்றுமை இழந்தனர்.( All the good conditions were destroyed by Nisakaliyan all over the country. The dignity and control of the younger generation to come has been shattered. He overthrew Chandor's chastity and equated him with a powerless drumstick.The witnesses lost their unity due to the unwillingness of Kalyan to defend them.)
என்றும் மக்களின் ஒழுக்கக் கேடுகளை வெளிப்படுத்தி இருப்பதை இத்துடன் இணைத்து நோக்குக.(Connect with this is the fact that people are always exposed to immorality.)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
🍇சங்கக்கூட்டம் இல்லையடா சரசக்கூட்டம் இக்கலியில்
----சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:
இக்கலியுகத்தில் சத்சங்கக் கூட்டத்தை இல்லாமல் ஆக்கி,அவற்றை சரச சல்லாப உல்லாசக் கூட்டம் ஆக்குவர். (In this age, satsangs will be abolished and they will be turned into sarcasm.)
குறிப்பு::
நல்லவர்கள் கூடும் சத்சங்கக் கூட்டத்தைச் சங்கக் கூட்டம் என்றும்.( The satsang meeting where the good people gather is also called the sangha meeting.)
இயற்கை உறவுக்கு மாறாக உறவு கொள்ளும் தீயோர்கள் கூடும் சரச சல்லாப உல்லாசக் கூட்டத்தைச் சரசக் கூட்டம் என்றும்( Sarasaka meeting is also known as Sarasa chatter meeting where the theorists who have a relationship as opposed to natural relationship)
வைகுண்டர் கூறுவதைக் காண்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
🍄"நஞ்சுதின்று நாளாச்சு நாதன் மறையப் போறேனடா"
----சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:
நான் தவமிருந்து பெறும் அமுதத்தை உண்டு பல நாள்கள் ஆகி விட்டன. ( It has been many days since I had the elixir of repentance.)
குறிப்பு::
நஞ்சு---அமுதம்
அது எப்படி நஞ்சு என்பது அமுதம் ஆனாது???
அய்யா வைகுண்டர் நஞ்சு என்னும் வார்த்தையை இன்னும் ஒரு இடத்திலும் அமுதம் என்றும் வெளிப்படுத்தி உள்ளார். ( Ayya Vaikundar also reveals the word poison in another place as elixir.)
"அடங்காத தவசதுதான் அதன் நஞ்சை அறிவீர்களா
வயிற்றுக்கு இரைதேடி வாறார்காண் அக்குருவும்" ----சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:: யார்க்கும் அடங்காத உயர்வான தவம் அதுவாகும். அத்தவத்தில் உண்டாகும் அமுதத்தை நீங்கள் அறியமாட்டீர்கள். நாராயண குருவும் தமது வயிற்றுக்கு இரையாக அமுதம் வேண்டுமென்று தவமிருக்க அங்கு வருகின்றார். (That is the highest penance that no one can attain. You do not know the elixir of life. Narayana Guru also comes there to repent of wanting elixir as prey for his stomach.)
வரியை இங்கு ஒத்து நோக்குக. அய்யா வைகுண்டர் கூறுவதைக் காண்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
🍑" ஆணும்பெண்ணும் கூட்டிஆட்டி ஆக்கி வைக்கநான் வருவேன்" ----சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:
பெண்களையும் இணைத்து ஆட்டி அவர்கள் இணைப்பு மூலமும் உயர்நிலை ஆக்கி வைக்கவும் நான் வருவேன்.( I will come to push women together and make them high through affiliation.)
குறிப்பு::
இது பாயங்கி யோகம் ஆகும். அதனை பற்றித் திருமூலர், ( This is Payangi Yoga. About it, Tirumular, )
"அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவம்
அங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே." --திரு மந்திரம்
பொருள்:: அங்கப் புணர்ச்சியாகிய பரியங்க யோகப் பயிற்சியால் உடம்பின்கண் அழியாது தங்கும் நாதவிந்துக்கள். விந்து நுகர்வு நினைவால் கீழ்நோக்கி வீணாகாமல் மேல் நோக்கிச் செலுத்தி நெற்றி நடுவில் தங்கும்படி அமைப்பர். அப்படி அமைத்தவர் பொறி புலன்களைத் தம் வழிப்படுத்தும் தலைவருமாவர். ( Indigestion is the immortality of the body by the practice of Pariyanga Yoga. The memory of sperm consumption is directed upwards and stays in the middle of the forehead without wasting downwards. The one who sets it up is the leader who guides the trap senses.)
பெண்ணுடன் பொருந்தி வரும் காமாக்கினியை யோகாக்கினியாக மாற்றி இறை நிலை அடையலாம் என்று சாக்தம், காஷ்மீர சைவம், மகாயான பௌத்தம் போன்றன வழிகாட்டியுள்ளன. ( Saktam, Kashmiri vegetarianism and Mahayana Buddhism have guided that one can attain the state of divinity by converting Kamakini which is compatible with woman into Yogakini.)
உராய்வு ஆற்றல் எலக்ட்ரோ காந்த நெருப்பாக மாற்றப்படுகிறது, மேலும் இது சூப்பர் கான்சியஸ் நிலைக்கு செல்ல உதவுகிறது(the Frictional energy is converted as electro magnetic fire and it helps to transcend to superconscious level)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
🍓"காளிவெள்ளம் வருகிறது. ஒரு கப்பல் செய்து வைத்திருங்கோ" ----சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:
பயங்கரமான சுனாமி வெள்ளம் பெருக்கெடுத்து வரப்போகிறது. எனவே, அதிலிருந்து தப்பிக்க ஆண்டியாகிய என்னைக் கப்பல் ஆக்கி அதை வலுவாகப் பற்றித் தயார் ஆகுங்கள்.(Terrible tsunami floods are coming. So, ship me Andy to escape from it and get ready to cling to it.)
குறிப்பு::
சுனாமி வெள்ளத்தைக் காளிவெள்ளம் எனக் கூறுகிறார். (He calls the tsunami flood a flood.)
காளிதேவி கோபத்தில் போரிடும் போது, யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ( When Goddess Kali fights in anger, no one can stop her.)
அதைப் போன்றது தான் காளி வெள்ளமும்.( The Kali flood is just like that.)
அதைத் தாக்குப் பிடிக்கத் தம்மைக் கப்பலாக ஏற்றுக் கொள்ளும்படி வழிமுறை காட்டுகின்றார். ( He shows the way to accept himself as a ship to attack it.)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
🍋"மாரிவெள்ளம் அழிக்குதா மாயாண்டி சொல்லுகிறன்" ----சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள் :
மாபெரும் மழை வெள்ளம் உண்டாகி உலகத்த அழிக்கும்; மாயாண்டியாகிய நான் தெளிவாக எடுத்துச் சொல்லுகிறேன். ( The great rain will flood and destroy the world; Mayanti, I make it clear.)
குறிப்பு ::
மாரி வெள்ளம்-- மழைநீர்ப் பெருக்கு
அதுவும் உலகத்தை அழிக்கும் சக்தி வாய்ந்தது எனக் கூறி, மழை வெள்ளத்தாலும் பேரழிவு காத்திருக்கிறது என எச்சரிக்கிறார். ( Saying that it is also powerful enough to destroy the world, he warns that disaster awaits even with the flood of rain.)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
🍍"இனிக் கடுவாய்க்கு இரையாகக் காட்டிக் கொடுத்திடுவேன் ----சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:
இனி உங்களை அழிக்க வருகின்ற மூவாசைகளுக்கும் இரையாகக் காட்டிக் கொடுத்திடுவேன்.(I will no longer betray you as a prey to the moose that are coming to destroy you.)
குறிப்பு ::
கடுவாய் -- மூவாசை (பெண் ஆசை | மண் ஆசை |பொன் ஆசை)
"கடுவாய் பிடித்ததுண்டால் காணாமல் மறைந்திடுவேன் ----சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:::இந்த அவதார உடம்பை மூவாசைகளும் பிடிக்க வருமானால் அவை கண்டு கொள்ள முடியாத படி நான் மறைந்து கொள்வேன். (If the incarnations come to capture the body, I will disappear so that they cannot be seen. )
"பாம்பு கடித்ததுண்டால் பதைத்து நீங்கள் பட்டிடூவீர் துணையுண்டோ உங்களுக்கு
குலத்தைக் கெடுக்கின்ற கோடாரிக் காம்பதுபோல்
உங்களுடைய பாவம் உங்களுக்கு உள்ளதாய் இருக்குதடா
கோபமது உங்களுக்குக் சொல்லும்வேலாய் இருக்குதடா ----சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்::::ஆனால், நீங்களா பொண்ணாசை பிடித்தால் பதைபதைத்து விழுந்து அழிந்து விடுவீர். மண்ணாசை பிடித்து விட்டால் இவ்வுலகில் எங்கும் நீங்கள் வாழ முடியாது. பொன்னாசை உங்களைப் பிடித்துக் கொண்டால் இந்த நாட்டில் நீங்கள் வாழ முடியாது. அண்ட சராசரங்கள் முழுவதையும் அணு ஆயுதம் தாக்கினால் நீங்கள் துண்டாடப் படுவீர்கள் (But, if you catch women, you will fall and perish.You can not live anywhere in this world if you are caught in the mud.You can not live in this country if you catch gold.If a nuclear weapon hits the entire cosmic average you will be torn apart )
-----------------------------------------------------------------------------------------------------------------------------
🍒"வையகத்தில் வைகைவாசல் காவலாளி ஒன்பது பேர்"----சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:
உங்கள் உடலில் கழிவுநீர் பாய்கின்ற வாசல்கள் ஒன்பது உள்ளன. அந்த வைகை வாசல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒன்பது காவலாளிகள் ஊர்.( There are nine gates through which sewage flows into your body. There are nine guards for each of those gates.)
குறிப்பு ::
வைகை வாசல் - - - நவத்துவாரங்கள்
கண் துவாரங்கள் -- 2
காதுத் துவாரங்கள்--2
மூக்குத் துவாரங்கள்--2
வாய்த் துவாரங்கள்--1
குய்யத் துவாரங்கள்-- 1
குதத் துவாரங்கள் - - 1
(Eye holes - 2, Ear piercings - 2, Nostrils - 2, Mouth openings - 1, Cavity holes-- 1,Anal holes - - 1)
காவலாளி ஒன்பது பேர் :
உருத்திரன்--வலகண் துவாரங்கள்
உருத்திரி--இடக்கண் துவாரங்கள்
சதாசிவன்--வலது காதுத் துவாரங்கள்
மனோன்மணி --இடது காதுத் துவாரங்கள்
விஷ்ணு-- வலது மூக்குத் துவாரங்கள்
இலட்சுமி --இடது மூக்குத் துவாரங்கள்
மகேசுவரர்--வாய்த் துவாரங்கள்
பிரம்மன்--குய்யத் துவாரங்கள்
விநாயகர்--குதத் துவாரங்கள்
(Uruthiran - Right eye openings, Uruthiri - left eye openings, Sathasivan - Right ear holes, Manonmani - left ear holes, Vishnu-- Right nostrils, Ilakshmi - Left nostrils, Maheswarar - Mouth openings, Brahman - Cavity holes, Ganesha - Anal holes)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
🥬"நாலு திரைக்கு உள்ளாக நடுவே ஒன்று இருக்கு தப்பா "
---சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:
நான்கு கடல்களுக்கு நடுவே ஒரு மூலைப் பகுதி இருக்கின்றது. ( There is a corner between the four seas.)
குறிப்பு ::
நாலு திரை:: சாலோபம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம்
மேலும் இதை பற்றி அறிய:-
http://ayyathunai2017.blogspot.com/2020/08/ayyavali-cayucciyam.html
நாலு திரை:: முட்டப்பதி கடல், குமரிக்கடல், தாமரைக்குளம்பதிக் கடல், மூலகுண்டபதிக் கடல்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
🧅"அஞ்சுவீடு அழியுதடா ஆண்டிநான் என்ன செய்வேன்"---சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:
உங்கள் உடம்பில் இருக்கின்ற பஞ்சகோசங்களும் அழியப் போகிறது, எல்லாவற்றிற்கும் காரணமாகிய ஆண்டி நான் என்ன செய்வேன்.( And the follicles in your body are going to die, and the reason for everything is Andy, what will I do. )
குறிப்பு ::
அஞ்சு வீடு-- பஞ்சகோசங்கள்
கோசம் என்றால் உறை என்பது பொருள். ஐந்து கோசங்கள் மத்தியில் மனம் மையம் கொண்டு செயல்படுகின்றது.கோசங்களை மனதில் எல்லைகள் என்றும் சொல்லலாம் ( Kosam means envelope. The mind functions with the center among the five slogans)
மனிதன் உருவாக காரணமாக உள்ள 5 கோசங்களாக ,
அன்மையகோசம்-- பூதவுடலாகியஉறை-- உணவால் தோற்றுவிக்கப்பட்ட உறுப்புக்களின் தொகுதி அன்னமயகோசம். ( Annamayakosam is a set of organs created by food.)
பிராணமயகோசம்--வாயு உறை-- பிராணன் முதலிய பதினான்கு வாயு வகைகள் அன்னமயகோசத்தில் புகுந்துறையும்போது அது பிராணமயகோசமாகும். ( When fourteen types of gases like prana enter the annamayakosa, it is pranamayakosa.)
மனோமயகோசம்--மனம் உறை-- மன எண்ணங்களால் உருவாவது.
விஞ்ஞானமயகோசம் - - புத்தி உறை--புத்தியால் அமைவது விஞ்ஞானமயகோசம். எண்ணில்லாத சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பதே புத்தியாகும். ( Being intelligent is scientific. It makes sense to give shape to countless thoughts.)
ஆனந்தமயகோசம்-- இன்பம் உறை --மனிதன் பெறும் மாறாத மகிழ்ச்சி - நிலைத்த இன்பம் ஆனந்தமயகோசம் ஆகும். ( The unchanging joy that man receives - lasting pleasure is bliss.)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
🥭"ஆண்டிக்குக் கோபமானால் அழிந்துவிடும் முப்புரம்போல்"---சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:
இந்த ஆண்டிக்குக் கோபம் வந்து விட்டால் முப்புரங்கைளை அழித்தது போல் எல்லாரையும் அழித்து விடுவேன்.( If this Andy gets angry I will destroy everyone like I destroyed the triplets.)
குறிப்பு ::
முப்புரம் போல்-- திரிபுராதிகள் என்பவர்கள் இரும்பு, வெள்ளி,பொன் மதில்கையுடைய கோட்டைகளுடன் பறந்து தேவர்களத் துன்புறுத்தவும், திரிபுராரி சிவமூர்த்தி திரிபுராதிகளையும் கோட்டைகளையும் அழித்தைப் போல்.( The Tripuradhis flew with forts of iron, silver and gold to persecute the gods, just as Tripurari Sivamurti destroyed the Tripuradhis and forts.)
"மூவார் புரங்க ளெரித்தவன்று" ----தேவாரத் திருப்பதிகம் (திருவண்ணாமலை - திருச்சிற்றம்பலம்)
பொருள்: அழியா வரம் பெற்ற அசுரர்களின் முப்புரங்கைளை எரித்து அழித்திடுவார். ( He will burn and destroy the three faces of the immortal blessed monsters.)
திரிபுராதிகள் என்பது ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களி வசிக்கின்றவர்கள் ஆகும். அந்த மும்மலங்களையும் சிவ பெருமாள் எரித்து நீறாக்கி விடுகின்றார். ( The Tripuradhis are the inhabitants of the triad of arrogance, delusion and delusion. Shiva Perumal burns and dehydrates those three.)
----- திருப்புகழ்
திரிபுராதிகள்:
இவர்கள் முத்தரத்தினர்கள், எண்ணிலோர்கள், அரக்கர், அசுரர், அவுணர், தானவர், நிசிசரர் என்ப்படுவார்கள்.
அளவிடா படாத கொலைத் தொழில் செய்தவார்கள்.
தேவருகளையும், மனிதருகளையும் நினைக்க அளவில் நலிவு செய்தார்கள்.
தேவர்களை அச்சுறும்படி வெம்மைப் போர் புரிந்தர்கள்.( They are called Muttrattinars, Ennilors, Arakars, Asuras, Aunars, Dhanavars and Nichisaras.
Those who practiced immeasurable murder.
They were too weak to think of gods and men.
They fought a fierce battle to threaten the gods.)
----தேவாரம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------
🥝"பாச்சித்துராசன் கண்டதுண்டு பயத்து இங்கே ஒடி வந்தேன்""---சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:
பரிச்சித்துராசனும் என்னைத் தவத்தில் கண்டதுண்டு; அவனுக்கும் அருள் பாலித்துவிட்டு, இங்கு ஓடி வந்தேன்.(Paricittu Rasan also saw me in meditation; I graced him too and ran here.)
குறிப்பு ::
பரிச்சித்துராசன் பற்றி பாகவத புராணம் கூறுகிறது.
அந்த கதை சுருக்கம் இந்த இணைப்பில் உள்ளது.
http://ayyathunai2017.blogspot.com/2021/02/summary-of-paritsithur-arasan-story.html
அல்லது அதனை பற்றி சிறியதாக,
இவன் இராசரிசி, இவன் வேட்டைக்குச் செல்லும் போது, சமீகரிசியின் கழுத்தில் இறந்த பாம்ப அணிவிக்க. அம்முனிவரின் மகன் சிரிங்கி முனி அதையறிந்து, தட்சகன் பாம்பினால் ஏழாம் நான் இறக்கச் சாபம் இட்டான். சுகர் மூலம் முன் விதியின் உண்மையை அரசன் உணர்ந்து, ஏழாம் நாள் இறந்தான். இவன் மகன் சனமேசயன், சாபமிட்ட முனிவன் பெயரை மகா சந்தர் எனவும். கடித்த பாம்பினைக் கார்க்கோடன் எனவும் தேவிபாகவதம் கூறிச் செல்லும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
🌽"கோபமது உங்களுக்குக் கொல்லும்வேலாய் இருக்குதடா"---சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:
கோபம் கூட வே இருந்து கொல்லும் வேலாக இருக்கிறது. ( Anger is like a killer vale.)
குறிப்பு ::
இதனை திருவள்ளுவர்,
"சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனென்னும்
ஏமப் புணையைச் சுடம்"
- - திருக்குறள் (306)
பொருள் ::: சினமென்னும் தீ, அதைக் கொண்டவனையும் , அதற்கு துணையாகிய சினத்தையும் அழிக்கும் (The fire of angers,destroys the one who has it and the anger that accompanies it.)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
🍬"மார்க்கண்டேயன் கண்டதுண்டு மறைந்து இங்கே வந்ததுண்டு"---சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:
என்னை மார்க்கண்டேயன் தவம் இருந்து கண்டது. உண்டு; நான் அவனைக் 'காணாமல் மறைவாய் இங்கே வந்தேன்.
( I have seen from Markandeyan penance; I came here secretly missing him.)
குறிப்பு ::
மார்க்கண்டேயன் பற்றி:
அந்த கதை சுருக்கம் இந்த இணைப்பில் உள்ளது.
http://ayyathunai2017.blogspot.com/2021/02/blog-post.html
அல்லது அதனை பற்றி சிறியதாக,
இவர் மிருகண்டு முனிவருக்கும் மருத்துவதிக்கும் பிறந்த குமாரர். தமக்கு வாழ்நாள் 16 வயது தான் என்பதை அறிந்து, தம்மைக் காக்கச் சிவபூசை செய்யும் போது. யமன் பாசக்கயிற்றை வீசவும், சிவமூர்த்தி தோன்றி, யமனைக் காலால் உதைத்து, இவனுக்குச் சிரஞ்சீவியாா இருக்க அருள்பாலித்தார். இவர் கண்ணன் மூலம் முதல் பொருளை அறிந்தவர் விஷ்ணு மூர்த்தியின் உடலில் புகுத்து . பிரபஞ்சங்களைக் கண்டவர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
🌳"அது குட்டிோட்டு இருக்குதப்பா முக்கோடி தவம்செய்து "---சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
பொருள்:
"ஒரு மூலப்பொருள் (விஷ்ணு) வைகுண்டரை தமது குழந்தையாகப் பெற்றெடுத்துள்ளது. அக்குழந்தையும் மூன்று பெரிய தவங்கள் செய்து "( An ingredient (Vishnu) has given birth to Vaikundara as their child. And the child did three great penances. ")
குறிப்பு ::
முக்கோடி தவம்:--- மூன்று பெரிய தவசுகள்
1.யுகத்தவசு
2. சாதித்தவசு
3.பெண்ணாட்டுத் தவசு
இதனை பற்றி அய்யா அகிலத்திரட்டு அம்மானையில்,
"முதற்றான் தவசு யுகத்தவசு என் மகனே
தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே
மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்"
பொருள் :::
1. முதல் முறையாக நீ செய்ய வேண்டிய தவசு கலியுகத்தை அழிப்பதற்கு செய்யும் யுகத்தவசு ஆகும்.
2. அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய இரண்டாம் தவசு "மொய்குழலார் வம்சங்கள்" ஆகிய சான்றோர் சாதி மக்களைக் காத்துக் கொள்ள செய்யும் தவசாகும்
3. கடைசியாகச் செய்ய வேண்டிய மூன்றாம் தவசு, நீ "முன்னுைரைத்த அணங்கு " ஆகிய பரதேவைதை என்னும் பெண் உயர்வு பெறவும், நல்ல முறையில் வாழ்ந்துவரும் உன் முன் பிறந்த மூதாதையர்களின் நல்ல வம்ச வழி மக்களுக்கு நன்மை கிடைக்கவும் செய்யும் தவசாககும். ( 1. The first thing you have to do is to destroy the Kali Yuga.
2. The second penance to be performed following it is the penance to protect the people of the Chandor caste, the "Moikuzhallar dynasties".
3. The third penance to be performed is the penance for which you ascend to the paradise of the "prophecy" and benefit the people of the good lineage of your ancestors who lived well.)
-----------------------------------------------------------------------------------------------------------------------------

Comments
Post a Comment