uchipadippu(உச்சிபடிப்பு )

அய்யா துணை

🦚உச்சிபடிப்பு 



Published by,
அய்யா வைகுண்ட சிவபதி,கோவை.

🦋உச்சிபடிப்பு(uchipadipu):

சிவசிவா அரிகுரு சிவசிவா 
சிவசிவா ஆதிகுரு சிவசிவா 
பொருள் :
சிவமே அருள் சக்தியே,என் உடலையும் ஆன்மாவையும் சிவன், பிரம்மா,விஷ்ணு ஆகிய முப்பொருளும் ஒரு பொருளான வைகுண்டரிடம் சரணடைய செய்து அவரோடு இரண்டற கலக்க செய்வீராக. 
என் அறியாமையும் என்னை மயக்கும் மாயையையும் நாராயண குருவே,ஆதி குருவே.
Explanation: 
Shiva is the power of grace, and so is my body the souls are Shiva, Brahma and Vishnu three things to Vaikundar surrender and mix with him.
My ignorance and mystifying illusion narayana guruve ,athi guruve.
மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம் 
அல்லா இல்லல்லா இறைசூல் மகிலல்லா சிவசிவா சிவமண்டலம் 
அரி நாராயணகுரு சிவசிவா சிவமண்டலம் 
பொருள் :
நம்முள் காணும் நிலம், நீர் ,அக்கினி,வாயு ,ஆகாயம் ஆகிய மண்டலங்கள் எங்கும் சிவமே.
இப்பூமியின் உற்பத்திக்குக் காரணமாகிய சிவம் இல்லாவிடில் கடவுள் என்ற ஒன்று இல்லை.
என்னை சார்ந்திருக்கும் மும்மலங்களையும் பிறவிகளையும் அளிக்கும் நாராயண குருவே, மண்டலம் எங்கும் சிவமே.   
Explanation: 
The earth, water, fire, gas, and sky are within us.If there is no redness that has caused the production of the earth,
There is no such thing as God. 
who Depends on us Narayana Gurudev, who gives birth and birth
நாதன் குருநாதன் சிவசிவா சிவமண்டலம் 
பரலோகம் அளந்த பச்சைமால் நாராயணர் சிவசிவா சிவமண்டலம்  
பொருள் :
வைகுண்ட நாதன் தான் நமக்கெல்லாம் குருநாதன்.மண்டலம் எங்கும் சிவமே. 
பரலோகத்தையும் ,பூலோகத்தையும் ,பாதாள லோகத்தையும் இரண்டு அடிகளில் அளந்தவர் பச்சைமால் நாராயணர். மண்டலம் எங்கும் சிவமே.
Explanation: 
Vaikunda Nathan is the teacher of all of us.The zone is ubiquitous sivame.
pachaimal Narayana who measured the heaven, the earth, and the underworld in two feet.The zone is ubiquitous sivame.
திருவுக்கும் சடைகுரு சிவசிவா சிவமண்டலம் 
செங்கண் திருகுரு சிவசிவா சிவமண்டலம் 
பொருள் :
இலட்சுமிக்கும்  துணையான சடைகுரு சிவசிவா மண்டலம் எங்கும் சிவமே. 
செம்மையான ஞானக்கண் பொருந்திய குருவே,சிவசிவா 
Explanation: 
Lakshmi is a companion gem,The zone is ubiquitous sivame.
The Guru of the Enlightened Eye,siva.
சன்னியாசி குரு சிவசிவா சிவமண்டலம் 
மகாகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம்
பொருள் :
சந்நியாசியான குருவே,சிவசிவா மண்டலம்  எங்கும் சிவமே.
உயர்வு வாய்ந்த குருவே ,சிவசிவா மண்டலம் எங்கும் சிவமே.
Explanation: 
The Guru of the Nun.Shiva is the ubiquitous Shiva region.
The High Priest..Shiva is the ubiquitous Shiva region.
அரி சங்காரகுரு சிவசிவா சிவமண்டலம்
மகாகுரு சிவசிவா சிவசிவா சிவகுருமண்டலம் 
பொருள் :
மலங்களையும், பிறவிகளையும் அழிக்கும் நாராயணா குருவே. சிவசிவா மண்டலம்  எங்கும் சிவமே.
மிகவும் உயர்வு வாய்ந்த குருவே,சிவசிவா. 
Explanation: 
Narayana Gurudev destroys flowers(Elements of affection) and Congenital. Shiva is the ubiquitous Shiva region.
Most Highly Guru, Shivasiva.
மண்டலம் குருமண்டலம் மாயன் குருமண்டலம்
குண்டலம் குருகுண்டலம் சிவசிவா குருகுண்டலம் 
பொருள் :
மண்டலம் முழுவதும் இருப்பது நாராயணராகிய முழக்குருவும். 
குண்டலினி சக்தியான நாராயண குருவும் ஆவார். சிவசிவா.
Explanation: 
Narayana guru is the whole region.
Narayana Guru was also a Kundalini force.
சங்கநிதி குண்டலம் தரணி குருகுண்டலம்
தரணியது குண்டலம் தரணி புகழ் குண்டலம்
பொருள் :
அமுதநதி பாயும் இடமான ஆக்ஞையில் இருப்பது குண்டலினி சக்தியே. நமது உடலில் இருப்பதுவும் சக்தியான நாராயண குருவே. 
இவ்வுலக மக்கள் வியந்து புகழுவதும் எல்லை இல்லாத குண்டலினி சக்தியையே. 
Explanation: 
Kundalini Shakti is the place where the river Amutha flows.Narayana Guru is the force in our body.
What the people of this world admire is the boundless Kundalini force.
சிவசிவா எங்கும் நிறைந்தவர்
ஏகாமயமாய் நின்றவர் சிவசிவா 
ஏகக் குருவாகப் படைத்து அது நிறைந்தவர் சிவசிவா
பொருள் :
மிகப்பெரிய மூவுலகத்தையும் ஈரடியில் அளந்த திருமாலே எங்கும் நிறைந்தவர்;சிவசிவா.
அவரே ஒன்றாயும் எல்லாமாயும்  நின்றவர்; சிவசிவா. 
அவரே எல்லாருக்கும் ஒரே குருவான வைகுண்டரைப் படைத்து அவரிலும்   நிறைந்தவர்;சிவசிவா. 
Explanation: 
Thirumala is the ubiquitous of the largest moon and the two dimensions. 
He is one and all. 
He is the Creator of Vaikundar, the only Guru of all and He is full of Him.
படைத்து நிறைந்தவர் பாலன் வடிவு கொண்டவர்
பங்காளர் பங்காளர் பருலோகம் அளந்தவர் 
பொருள் :
அவரே எல்லாவற்றையும் படைத்து எல்லாவற்றிலும் நிறைந்தவர்; சிவசிவா.
அவரே வைகுண்டர் வடிவு கொண்டவர். இவ்வுலகை அளந்த, அவரே எல்லாருக்கும் பங்காளராகவும், எல்லாவற்றிலும் இருப்பவர். 
Explanation: 
He is the Creator of everything and full of everything. 
He has the form of Vaikundar. He is the partner of all things in this world.
அளந்த திருமால் ஆதிகுரு சன்னியாசி 
சிவசிவா சன்னியாசி செந்தில்வேல் வடிவுமவர் 
பொருள் :
எவ்வுலகத்தை அளந்தவர் திருமால்.அவரே ஆதி குரு சன்னியாசி; சிவசிவா. 
அந்த சன்னியாசியே முருகனின் ஞான வேல் வடிவம் ஆகியவர். 
Explanation: 
Thirumul who measured the whole world.He was the first guru sannyasi.
The sannyasi is the form of Lord Murugan's wisdom.
செந்தில்வேல் சன்னியாசி செந்தில் வேலவர் 
வடிவும் புகழ்படைத்தவர் மாய நிறமானவர் அவர் சிவசிவா 
பொருள் :
முருகனின் வேல் வடிவம் ஆகிய சன்னியாசி. அந்த சன்னியாசியே திருச்செந்தூர்வேலவர் வடிவும் பெற்றவர்
அவ்வுருவத்தின் மூலமாக இவ்வுலகெலா புகழும் பெரும்புகழைப் படைத்தவரும்.பிறரை மயக்கும் பல நிறங்களைக் கொண்டவரும் அவரே. சிவசிவா. 
Explanation: 
Sannyasi, the Vale form of Lord Murugan.The sannyasi is also a form of Thiruchendur Velavar. 
Through this image, the world is famous and a great creator. He is also a man of many colors. 
கங்கை கண்ணானவர் காரணம் நிறைந்தவர் 
நிறைந்து நிறைந்தவர் ஏகமெல்லாம் நிறைந்தவர்
பொருள் :
அவரே கங்கைநதி பாயும் ஆக்ஞா பகுதியில் ஞானக் கண்ணாகத் நிகழ்பவர். 
அவரே மூலாக்கீனிக்குக் காரணமான  மூலாதாரத்தில் நிறைந்தவர். 
Explanation: 
He is an enlightened guru of the river Ganga.
He is the source of the moolakhani(fire of strong desire).
எங்கும்  நிறைந்தவர் ஏகமாய் நின்றவர் 
மண்டலம் புகழ்படைத்த மாயன்குரு சன்னியாசி 
பொருள் :
அங்கும் நிறைந்து எல்லா ஆதாரங்களிலும்  நிறைத்தவர். அவரே ஆதாரம் ஒவ்வொன்றிலும் தனி தனி இறைவனாக நிற்பவர். 
இம்மண்டலம் முழுவதும் புகழை படைத்த மயனும் குருவும் ஆகிய சந்நியாசி அவரே . 
Explanation: 
He is full of all evidence.He is the lord of everything in every respect.
He is a Mayan and Guru who is famous throughout the region.
சிவசிவா தெந்தி நன்னாய் தென்னானாய் 
தெந்தி நன்னாய் தென்னானாய் 
சிவசிவா தா மா ஆன சி அரி நன்றாகக் குருவே துணை 
பொருள் :
சிவசிவா,சூழுமுனையில் நன்றாய் நிலை நின்றால்,முலாத்காரத்தில் ஓம் என்னும் இசை கேட்டு அதுமயமாவாய்.
சூழுமுனையில் நன்றாய் நிலை நின்றால் விசுத்தி ஆதரத்தில் தென்னன் ஆகிய மகேசுவரனை அடையா வேண்டி, சுவாதிட்டானம் ஆதரத்தில் இருக்கும் பிரம்மா(தா) அடைந்து , பிறகு மணிப்பூரகம் ஆதரத்தில் இருக்கும் இலட்சுமியின்(மா)  நாதனாகிய திருமாலை அடைந்து, அங்கிருந்து அநாகதம் ஆதரத்தில் இருக்கும் உருத்திரனை(சி) அடைவாய். இவ்வெற்றிக்கு அரி நாராயணர் நல்ல குருவாகத் துணை நிற்பார் 
Explanation: 
If you stand well in the background, you will be able to listen to the music of Om in the Muladkaram.
If you stand on the sidelines, you will reach the Brahma (da), who is in favor of the Swadittanam,and then attain Lord Thirumala, who is in support of Manipurakam, and then return to the eternity-supported Rudra (C).
சிவசிவா தெந்தி நன்னாய் தென்னானாய் 
தெந்தி நன்னாய் தென்னானாய்
பொருள் :
மீண்டும் சூழுமுனையில் நன்றாய் நிலை நின்றால், ஆக்ஞா ஆதரத்தில் இருக்கும் அருவுருவான சதாசிவத்தை அடைவாய். 
மீண்டும் சூழுமுனையில் நன்றாய் நிலை நின்றால்,சகசுராரத்தில் இருக்கும் விளக்க முடியாத சிவம் ஆவாய். இதை யஜூர் வேதம் அகம் பிரம்மாஸ்மி என்று விளக்கும். இதை வைகுண்டர்  தென்னானாய் என்னும் சொல் மூலம் பல பொருளில் விளக்குகிறார். 
Explanation: 
If you stand in the back of the situation, you will attain the supernatural sadhasivam which is in the support of Agna.
If the situation is good again, you will be inexplicably red in the fellowship.The Yajur Veda describes this as Akam Brahmasamy. Vaikundar explains it in many respects by the term "Tennanay"(cocunut).
சிவசிவா தன்னானாய் தன்னானாய் தன்னானாய் தன்னானாய்
பொருள் :
அறிவின் மூலம் இது இல்லை, இது இல்லை என ஒவ்வொன்றாகத் தள்ளிவிட்டு,கடைசியாக எஞ்சி இருப்பது எதுவோ. அதுவே ஞானம் அல்லது பிரம்மம்.இவ்வாறு அறிவின்மூலமாக பிரம்மத்தை உணர்ந்து கொள்வதை ரிக்வேதம் பிரக்ஞானம் பிரம்மம் என்று கூறும். இதை வைகுண்டர் தன்னானாய் எனும் சொல் மூலம் பல பொருளில் விளக்குகிறார். 
Explanation: 
It is not through knowledge, it is pushed into each other as it is not, and what is left is the last.The Rigveda Pragya Pranaam Brahman is the realization of  Brahman through knowledge.Vaikundar explains it in many respects by the term 'tananai'.
சிவசிவா தானானோம் தானானோம் தானானோம் தானானோம்
பொருள் :
இறைவனின் ஆன்மாவைத் தோடும்போது,முதலில் ஆன்மா இறைவனிலிருந்து வேறாகவும்,பிறகு அவன் அருகிலும் ,அடுத்து ஆன்மா அவனின் கடைசியாக அவ்விறைவனே ஆன்மா என்பதையும் அறியலாம். இதை சாம வேதம் தத்துவம் அசி(நீ அது ஆகிறாய்) என்று கூறும். இதை வைகுண்டர் தானானோம் எனும் சொல் மூலம் பல பொருளில் விளக்குகிறார்.
Explanation: 
When we seek the soul of the Lord, we can first know that the soul is separate from the Lord, then near him, and that the soul is his last.This is called the Sama Veda philosophy asi (you are it).Vaikundar "tananom" is explained in many ways by the word.
சிவசிவா நானானோம் நானானோம் நானானோம் நானானோம்
பொருள் :
நமது ஆன்மாவில் இறைவனைத் தோடும்போது முதலில் நாம் இறைவனிலிருந்து வேறாகவும்,பிறகு அவன் நமது அருகிலும் ,அடுத்து நமது ஆன்மாவிலும்  கடைசியாக நமது ஆன்மாவே இறைவன் என்பதையும் புரிந்துகொள்ளலாம். இதை அதர்வணவேதம் சுயமாத்மா பிரம்மம்(என் ஆத்மா பிரம்மம்) என்று கூறும். இதை வைகுண்டர் நானானோம் எனும் சொல் மூலம் பல பொருளில் விளக்குகிறார்.இதை சாலோகம், சாமீபம்,சாரூபம்,சாயுச்சியம் எனவும் கூறலாம். 
Explanation: 
When we seek God in our souls, we can understand that we are separated from God first, then He is near us and then our souls and finally our Lord.This is called the Atharvaveda Self-Brahman (my soul Brahma).Vaikundar explains it in many senses by the term "nananom".It can also be called salokam(gods living place), samaipam(god's grace), Carupam(change as god),Cayucciyam(our soul connect with god).
சிவசிவா தந்தேனன்னம் தந்தேனன்னம் தந்தேனன்னம் தந்தேனன்னம் 
மகாலிங்கம் சிவலிங்கம் குருலிங்கம் திருலிங்கம் ஏகலிங்கம் எக்காலிங்கம் அரிலிங்கம் லிங்காலிங்கம் சொக்கலிங்கம் சுகாலிங்கம் ஆதிலிங்கம் அருள்லிங்கம் அடங்காலிங்கம்
பொருள் :
முடிவாக, வைகுண்டர் காற்றமுதம் , நீரமுதம்,உணவமுதம், கொண்டையமுதம் ஆகிய நான்கு அமுதங்களையும்  தந்தேனன்னம் எனும் சொல் மூலம் பல பொருளில் விளக்குகிறார்.
நாம் கொண்டை அமுதத்தை சமைத்து வரும் நாளில் நமக்கு  மகாலிங்கம் சிவலிங்கம் குருலிங்கம் திருலிங்கம் ஏகலிங்கம் எக்காலிங்கம் அரிலிங்கம் லிங்காலிங்கம் சொக்கலிங்கம் சுகாலிங்கம் ஆதிலிங்கம் அருள்லிங்கம் அடங்காலிங்கம் ஆகிய லிங்கங்களை தந்தருள்வதாக இங்கு வாக்குறுதி தருகின்றார்
Explanation: 
Finally, Vaikundar is airtight, hydraulic, dietary, and endemic are  the sense of all the four elixirs, the word "Danteannanam".
On the day when we cook the elixirWe have Mahalingam Sivalingam Kurlingam Thirlingam Ekalingam Ekaalingam Arilingham Lingalingam Sokalingam Sukaalingam Adthilingam Arulingam adakalingam.Here are the lingams which He makes the promise.
'. ***அய்யா உண்டு ***

   


Comments

Post a Comment

Popular posts from this blog

Arulnul(அருள்நூல்)

Donation Completion Read(தான நிறைவு வாசகம்)