Donation Completion Read(தான நிறைவு வாசகம்)

அய்யா உண்டு
தான நிறைவு வாசகம்  
___
அய்யா வைகுண்ட சிவபதி, கோவை.

தான நிறைவு வாசகம்:

தானம் என்பது தரிசனம் அல்லது இறைக்காட்சி எனப் பொருள்படும்.அதாவது இறைவன் தோற்றத்தை தன்னில் கண்டு மன நிறைவு பெறும் வசனமாக இப்பகுதி காட்சி அளிக்கிறது. 

Donation Completion Read:

Donation is a vision or  god vision. That is, the region is seen as a verse in which the image of the Lord is found in him.   

🌻கொத்துச் சரப்பளிக்காரன் வர்த்தக 

நாராயணன் தெச்சணத்தில் வந்திருந்து 

பொருள்:

🌻இடகலை வலகலை ஆகிய இரண்டும் பின்னிய கொத்தாகிய சுழிமுனையில் பிரகாசமாக நிற்பவரும் . 
🌻பூரகம் ,கும்பகம்,ரேசகம் ஆகியவற்றில் முறையாகப் பயிற்சி அளிக்கும் நாராயணரும்,தெச்சணா பூமியில் வந்திருந்து தமது பக்தர்களுக்குச் ஆனவர் வைகுண்டர் ஆவார்.    

explanation:

🌻Both edakkalai and valakalai are bright in the clusters in which he stands.
🌻Vaikundar was a devotee who came to the Thechchana earth and became a devotee of Narayana, who is a regular practitioner of Poorakam, Kumbhakam and Raysakam.

🚩பிச்சை கொடுத்த பக்தன் சித்தூர்க் குடும்பத்தை 

வைத்து அரசாளுவது எங்கள் அய்யா 

சிவசிவ சிவசிவா அரகர அரகரா 

பொருள்:

🚩இவ்வாறு அமுதை அருந்த சகாசுராரம் ஆகிய சித்துரை அடைந்த தவசிகளை தமக்கு கீழ் வைத்து அரசாண்டு வருவதும் எங்கள் அய்யாவே. 
🚩பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே, சிவனே ,அருள்சக்தியே, என்னைச் சார்ந்திருக்கும் மும்மலங்களையும் பிறவிகளையும் அழித்துவிட்டு எனது ஆன்மாவை சுத்தப்படுத்தி பொருளும் ஒரு பொருளாக வைகுண்டரிடம் சரணடைய செய்து அவரோடு இணைய செய்வீராக.      

explanation:

🚩It is our brother(ayya)  who is under the rule of the Sakurasuram, the wine that has reached the state under him.
🚩Vishnu, the lord of the serpent, Lord Shiva, Arul Shakti, destroys the mummies and other things that depend on me, purifies my soul and surrenders to Vaikundar as an object.

🌸பிரமனை அடுத்ததுக்காகப் பூவண்டன்மார் 

காவிகொள்ளப் பூச்சலங்கை கொடுப்பதும் எங்கள் அய்யா 

சிவசிவ சிவசிவா அரகர அரகரா 

பொருள்:

🌸சகசுராரத்தில் பிரமனை அடைந்து அங்கு நிலைத்து நிற்பதற்கு அத்தவசிகள் அமுது உண்ண வேண்டும். 
🌸அதற்காக அந்த அமுதம் ஊறும் இடமாகிய ஆயிரம் இதழ் கொண்ட பூவைக் காட்டிக் கொடுப்பதும் எங்கள் அய்யாவே. 
🌸பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே, சிவனே ,அருள்சக்தியே, என்னைச் சார்ந்திருக்கும் மும்மலங்களையும் பிறவிகளையும் அழித்துவிட்டு எனது ஆன்மாவை சுத்தப்படுத்தி பொருளும் ஒரு பொருளாக வைகுண்டரிடம் சரணடைய செய்து அவரோடு இணைய செய்வீராக.      

explanation:

🌸In order to attain Brahman in the Sahasrarata and to remain there, he must eat the Elixir. 
🌸It is our brother (ayya )who betrayed the elixir of a thousand petal flowers. 
🌸Vishnu, the lord of the serpent, Lord Shiva, Arul Shakti, destroys the mummies and other things that depend on me, purifies my soul and surrenders to Vaikundar as an object.

🔱ஆண்டியும் ஆண்டிச்சியும்கூடி அழித்து 

வரும்போது அன்புள்ள பக்தரை ஆல்போல் 

தழைக்க வைப்பதும் எங்கள் அய்யா 

சிவசிவ சிவசிவா அரகர அரகரா 

பொருள்:

🔱ஆண்டியும் அவர் மனைவியாகிய ஆண்டிச்சியும் தங்களை எதிர்ப்பவரை அழித்துக் கொண்டுவரும். அதே சமயம் தங்கள் மேல் நிலையான அன்பு கொண்ட பக்தர்களை ஆலமரத்துக் கிளைகள் போன்று உறுதியான வேர் விட்டுத் தழைத்து வாழ வைப்பதும் எங்கள் அய்யாவே. 
🔱பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே, சிவனே ,அருள்சக்தியே, என்னைச் சார்ந்திருக்கும் மும்மலங்களையும் பிறவிகளையும் அழித்துவிட்டு எனது ஆன்மாவை சுத்தப்படுத்தி பொருளும் ஒரு பொருளாக வைகுண்டரிடம் சரணடைய செய்து அவரோடு இணைய செய்வீராக.      

explanation:

🔱Andi and his wife, Andichi, will destroy their opponent.At the same time, it is our Ayya who keep the devotees with steadfast love above their roots.
🔱Vishnu, the lord of the serpent, Lord Shiva, Arul Shakti, destroys the mummies and other things that depend on me, purify my soul and surrender to Vaikundar as an object.

Comments

Popular posts from this blog

uchipadippu(உச்சிபடிப்பு )

Arulnul(அருள்நூல்)