vaalapadipu(வாழப்படிப்பு)

அய்யா உண்டு

வாழப்படிப்பு

June 14, 2020

அய்யா வைகுண்ட சிவபதி,கோவை.

image_guitar.jpg

🚩சாத்திரத்திலுள்ள கன்னிமக்கள் நம்முடைய 

சான்றோர்கள் நன்றாய்த் தழைத்து வாழ  

பொருள்:
🚩ஆறு சாத்திரங்களிலும் கூறப்பட்டு வந்துள்ள ஏழு கன்னியாரும் திருமாலின் மூலம் ஏழு மக்களைப் பெற்றெடுத்தனர் . அவர்களின் சந்ததியார் ஆகிய நாம் இனச் சான்றோர்கள் நன்றாகச் செழித்து வாழ வேண்டும் . 
explanation:  
🚩The seven virgins, who are said to be in all the six Shastras, gave birth to seven people by Thirumul.We, the descendants of their descendants, should prosper.

🦋பத்திரத்தாள் பெற்ற மக்கள் நம்முடைய 

பைந்தொடிமார் கன்னிமக்கள் 

கோத்திரத்தோடே நன்றாய்த் தழைத்து வாழ  

பொருள்:
🦋ஏழு கன்னியாரும் ஈன்றெடுத்துக் காளியினால் வளர்க்கப் பட்டவர்கள் சான்றோர்கள். அவர்களுடைய சந்ததியாராகிய நம் இனச் சான்றோர்கள்தங்கள் அழகு பொருந்திய வளையல்களை அணிந்த மனைவியோடும் சுற்றத்தோடும்  நல்ல முறையில் தழைத்து வாழ வேண்டும் . 
explanation:
🦋The seven virgins were bred and raised by Kali. Our descendants, their descendants, must live well with the wife and the wearer, who wear beautiful bracelets.

♻விழிமடவார் படைத்தலைவர் 

நம்முடைய வெற்றிச் சான்றோர் 

நன்றாய்த் தழைத்து வாழ 

பொருள்:
♻வெற்றியுடைய அச்சான்றோர்கள் அழகு பொருந்திய விழிகளாலான சிறந்த பத்தினியை மனைவியாகப் பெற்ற படைத்தலைவர் ஆவர் .அவர்களது வாரிசான நம் இனச்சான்றோர்கள் தழைத்து வாழ வேண்டும். 
explanation:
♻Successful recipients are the leader of the brigade of beauty, the leader of the brigade.Their successor, our ethnic witnesses, must survive.

🌊கடலதிலே தவசிருந்தேன் நம்முடைய 

கண்ணு சான்றோர் 

நன்றாய்த் தழைத்து வாழ 

பொருள்:
🌊கண்ணைப் போன்ற நமது சான்றோர்கள் தழைத்து வாழ வேண்டித் திருச்செந்தூர்க் கடலினுள் மூன்று நாள்கள் கடுந்தவம் புரிந்து விஞ்சை பெற்று வந்தேன். அவர்கள் தழைத்து வாழ வேண்டும் . 
explanation:
🌊Three days in the sea of Thiruchenduruk, our eye-witnesses have thrived and thrived. They need to thrive.

🏹வில்லு கொண்டே எய்துவிட்டேன் 

நம்முடைய விசயன் சான்றோர் 

நன்றாய்த் தழைத்து வாழ 

பொருள்:
🏹நமது சான்றோர் இனத்திலுள்ள வில்வீரன் விசயன் வழியில் வந்த சான்றோர்கள் நல்ல முறையில் தழைத்து வாழ ,வைகுண்டர் என்னும் எனது வில்லின் மூலம் உபதேசம் என்னும் அம்பை எய்துள்ளேன். அதன் மூலம் அச்சான்றோர்கள் ஆன்மீக எழுச்சியுற்று கொண்டையமுது உண்டு   நன்றாய் தழைத்து வாழ வேண்டும். 
explanation:
 🏹have raised the arrow of instruction by my bow, Vaikundar.Through this, our people need to live a spiritual life.

🎀பார்த்துவிட்டேன் இரண்டு கண்ணும் கொண்டு 

நம்முடைய பத்தினி மக்கள் 

நன்றாய்த் தழைத்து வாழ

பொருள்:
🎀"சான்றோர்கள் நன்றாய்த் தழைத்து வாழ வேண்டும்" என்று எனது இரண்டு அருள் வீசும் கண்களினால் பார்த்து விட்டேன்.அதன் மூலம் அச்சான்றோர்களது குண்டலினி சக்தி வீரிட்டு எழுந்து அவர்கள் தழைத்து வாழ  வேண்டும். 
explanation:
🎀With my two glaring eyes, "The witnesses must live well."With that, the Kundalini power of the neighbors must rise up and thrive.

🦚மலைக் கன்னிமார் தங்காவில் பெற்ற 

நம்முடைய   மக்கள் வலியசீமை 

கட்டி அராசாள வாழ 

பொருள்:
🦚திருமாலின் விளையாடலுக்கு ஆட்பட்ட கன்னிமார் கானகத்தில் பெற்றெடுத்த நம்முடைய சான்றோர் மக்களின் குலம் வலிமை பொருந்திய பெரிய இந்நாட்டைப் பாதுகாத்து  அரசாண்டு வாழ்ந்து வரவேண்டும் . 
explanation:
🦚Born in the virgin forest of Thirumaal's play, our samorpore people will live in a state that protects a large and powerful country.

🔆தருமருட குலத்திலுள்ள நம்முடைய 

தெய்வச்சான்றோர் நன்றாய்த் தழைத்து வாழ 

பொருள்:
🔆தரும் சிந்தனையுள்ள தருமனது குலத்தில் தோன்றிய நமது தெய்வத் தன்மையுள்ள சான்றோர்கள் நன்றாய்த் தழைத்து வாழ வேண்டும். 
explanation:
🔆Our godly witnesses, who appeared in the family of thoughtful gentlemen, should live well.

🦋கோத்திரத்துச் சான்றோர்கள் நம்முடைய 

குடும்பத்தார்கள் நன்றாய் தழைத்து வாழ 

பொருள்:
🦋உயர்வான நல்ல குலத்தில் தோன்றிய நம்முடைய சான்றோரின் எல்லாக் குடும்பத்தவர் கிளைகளும் நன்றாய் தழைத்து வாழ வேண்டும். 
explanation:
🦋All the tributaries of our witnesses who appear in the highest good family must flourish.

🔆கோட்டைத் தளம் மதில் இடித்து வாழ 

நம்முடைய மக்கள் கோடிச் சீமை கட்டி அரசாள வாழ 

பொருள்:
🔆எதிரிகளின் கோட்டைகள், படைகள், மதில்கள் எல்லாவற்றையும் இடித்துத் தரைமட்டமாக்கி நம்முடைய சான்றோர் குல மக்கள் புதுமை பொருந்திய தேசங்களாக மாற்றிப் பாதுகாத்து அரசாண்டு வாழ வேண்டும். 
explanation:     
🔆We must demolish the enemy's strongholds, armies and walls, and transform our sovereign nations into innovative nations and protect them.

🌴ஆல்போலே தழைத்து வாழ 

நம்முடைய ஐவர் மக்கள் சீமை கட்டி அராசாள வாழ 

பொருள்:
🌴ஆலமரத்தை போன்று சான்றோர் இனம் இல்லற் வாழ்வில் செழித்தோங்கி தம்முடைய கிளைகளை அதிகமாகப் பரப்பித் தழைத்து வாழவேண்டும் . நம்முடைய பஞ்சபாண்டவார் இனத்தில் தோன்றிய சான்றோர் குல மக்கள் நாட்டைக் கட்டி காத்து ஒற்றுமையுடன் அரசாண்டு மகிழ்வோடு  வாழவேண்டும் .
explanation:      
🌴Like a banyan tree, the Sarporis should thrive in the non-native life and spread their branches.The people of Sapor, who originated in our Panchapandavar, should live in harmony and unity with the state.

⚔பயலுடையுய தரம் அறுத்துப் பண்டாரம் 

சீமையாள மக்கள் நன்றாய் தழைத்து வாழ 

பொருள்:
⚔கலிநீச தீயவர்களுடைய வலிமைகளை அறுத்து அழித்து பண்டராமகிய நான் இவ்வுலகத்தை ஆண்டு வர சான்றோர் குல மக்கள் நன்றாய் தழைத்து வாழ வேண்டும்.                              
explanation:
⚔Cut off the strength of evil with evil.so I(begger)  want the people of this world to live and flourish for the coming year.

Comments

Popular posts from this blog

uchipadippu(உச்சிபடிப்பு )

Arulnul(அருள்நூல்)

Donation Completion Read(தான நிறைவு வாசகம்)