(Ayyavali Cayucciyam)அய்யா வழிச் சாயுச்சியம்
அய்யா வழிச் சாயுச்சியம் அய்யா வைகுண்ட சிவபதி,கோவை. அய்யாவழிச் சாயுச்சியம்: இறைவனை அடைய நான்கு பதவிகள்(பேறுகள்) உள்ளன. அவையவான 1. சாலோக பதவி 2. சாமீ பதவி 3. சாரூப பதவி 4. சாயுச்சிய பதவி அய்யாவழிச் சாயுச்சியம்:( சாலோக பதவி) "பூலோக மனுக்கள் பிள்ளையைப் போலே வளர்ந்து மாலேற்கப் பூசை மனையில் மறவாமல் விட்டுணுவைப் போற்றி விளங்க ஒரு பீடம் இட்டு கட்டுத் தீர்க்காகக் கண் வளர்ந்தார் கலியில்" அய்யா பூலோகத்தில் வாழும் ஏனைய மக்களைப் போல் வளர்ந்தார். அவரது இல்லத்தில் திருமாலை அனுதினமும் இறைத் துதி செய்து வழிபட்டு வந்தார். இது சாலோக பதவி ஆகும் . அய்யாவழிச் சாயுச்சியம்:(சாமீ பதவி) வைகுண்டர் திருசெந்தூர் கடலில் நாராயணரை தமது அருகில் கண்டார் நாராயணர் அவருடன் பேசினார்,வாழத்தினார் ,உபதேசித்தார். இது சாமீ பதவி ஆகும். அய்...